2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை: இலங்கைக்கு சிக்கல்

Published:

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வருகிற 30-ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் டாப்-8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக தகுதி பெற முடியும். எஞ்சிய இரு இடத்திற்கு தகுதி சுற்றில் விளையாட வேண்டும். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணியால் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டு சிக்கலின்றி உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது 4 ஆட்டங்களில் தோற்று விட்டதால் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு எதிரான ஒரு ஆட்டம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகளை முழுமையாக வென்றால் அந்த அணி தரவரிசையில் 8ஆவது இடத்துக்கு முன்னேறி நேரடியாக உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை தட்டிச்சென்று விடும். மாறாக இதில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் வாய்ப்பு இலங்கை பக்கம் சென்று விடும்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img