அப்பா ஆனார் நகைச்சுவை நடிகர் சதீஷ் – ரசிகர்கள் வாழ்த்து

Published:

ccc33dd16e23da1a33d8b9fe89d21fb3 - 2026

தமிழ் சினிமாவில் முன்னணி நகைசுவை நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சதீஷ். ஜெர்ரி என்ற படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.  குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் அதிக படங்களில் நடித்துள்ளார்.
ஒருவருடத்திற்கு முன்பு சிக்ஸர் பட இயக்குனர் சாச்சியின் தங்கையை அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது அவர் அப்பா ஆகியுள்ளார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சதீஷ், தங்களை அனைவரும் ஆசிர்வதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஜெயம்ரவி, சிபிராஜ்,  ஹர்பஜன் சிங், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img