
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில், வருகிற 16ம் தேதி முதல் 9,10,11,12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
எனவே, பள்ளிகள், திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அநேகமாக இன்னும் சில நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Source: Vellithirai News



