ரசிகர்களுக்கு அஜித்தின் அன்பான வேண்டுகோள்!

சினி நியூஸ் சினிமா
ajith 1
ajith 1

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அரசியல் விழாக்கள்,அரசு விழாக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என எங்கு பார்த்தாலும் அவரின் ரசிகர்கள் பார்வையாளர்களை எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இதுபற்றி அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் .
என்று அவர் தெரிவித்துள்ளார்.

Screenshot_2021_0215_183616-1
Screenshot_2021_0215_183616-1

வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த சேட்டையால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.