‘சின்ன வீடு’ கல்பனாவின் மகளுக்கு கிடைத்த கதாநாயகி அந்தஸ்து

சினி நியூஸ் சினிமா

kalpana daughter - 2026கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய வெற்றிப்படம் ‘சின்னவீடு. இந்த படத்தில் நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின்னர் கல்பனா பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு மரணம் அடைந்த இவர் நடித்த கடைசி படம் கார்த்தி-நாகார்ஜூனா யின் ‘தோழா’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா தற்போது மலையாள படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார். . இர்ஷாத் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்து வரும் கல்பனா மகள் ஸ்ரீசங்க்யா நடித்து வரும் படத்தின் டைட்டில் ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்பது ஆகும்

கமேஷ்லால் இயக்கி வரும் இந்த படத்தில் கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகிறது

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.