பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யார் யார்? புதிய தகவல்

Published:

biggboss2b - 2026கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 100 நாட்களிலும் தொலைக்காட்சி தொடர்களை கூட பெண்கள் உள்பட அனைவரும் மறந்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி ரகுராம் உள்பட பலர் தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபலமாக உள்ளானர்.

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதற்கான புரமோ வீடியோ சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. இதன்படி பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img