- 2026

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 104.91 புள்ளிகள் சரிந்து 35,640.27 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 42.05 புள்ளிகள் சரிந்து 10,711.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஐ.டி., டெக் உள்ளிட்ட பங்குகள் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மின்சாரம், ஆற்றல், நிதி, டெலிகாம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல், மெட்டல், ரியாலிட்டி உள்ளிட்ட துறைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

திரைப்பட டிக்கெட் கட்டணம் மீதான ஜிஎஸ்டி கட்டணம் குறைப்பால் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

இன்போசிஸ் நிறுவனம் 1.60 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்வதால் 2.02 சதவீதம் உயர்ந்து 658.80 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா சரிந்து 10.41 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஐடி நிறுவனப் பங்குகள் உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 53.82 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் பேரல் 45.59 டாலர் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending