ஓட்டிங் குழப்படி பிரச்னை பிக்பாஸுக்கு தொத்திக்கிச்சி… விஜய் டிவியுடன் மல்லுக்கட்டும் கமல்!

Published:

biggboss onion - 2026

உஷ்… இதுதான் காதும் காதும் வெச்ச ரகசிய செய்தி! நேற்று நடந்த விஜய் டிவியின் ஓட்டுக் குழப்படி பெரிய பிரச்னையாக டிவிட்டர் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப் பட்டது.

விஜய் டிவி.,யின் தகிடுதத்தங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பெரிய அளவில் கண்டித்தனர். ஏன் இப்படி பார்வையாளர்களையும் ரசிகர்களையும் நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்ற வேண்டும் என்று பலரும் குமுறித் தள்ளினர்.

இதை அடுத்து ‘நேர்மையின் நாயகர்’, ‘நாணயத்தின் உறைவிடம்’ கமல்ஹாசன் பிக் பாஸ்-2இல் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளாராம்.

ஏற்கெனவே பிக்பாஸ் சவ்வாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று பார்வையாளர்கள் கடித்துக் குதறினர். பிப்பாஸ் பார்வையாளர்கள் எண்ணிக்கை சரிவை அடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தது விஜய் டிவி நிர்வாகம். ஆனால், அதை எல்லாம் கண்டு கொண்ட கமல் பிக்பாஸ் வீட்டில் நடித்து நடித்து விளையாடுபவர்களிடம் கொஞ்சம் சீரியஸாக கடிந்து கொண்டார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

கட்டிப்புடி வைத்தியம் எல்லாம் செய்து பிக் பாஸ் வீட்டில் நடித்தவர்கள் கொஞ்சம் ஓவர் ஆக்ட் கொடுக்க, கமலே காறித் துப்பிய மொமண்ட் எல்லாம் கூட நடந்தது. இந்நிலையில், ஓட்டிங் குழப்பத்தை ஒரு சாக்காக வைத்து, பிக்பாஸ் விஜய் டிவி நிர்வாகத்துடன் டஃப் ஃபைட் போட்டு வருகிறாராம். .அதனால் விஜய் டிவி நிர்வாகம் கமலுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img