“தியாக உழைப்பிற்கு பெரியவாளின் பரிசு”

Published:

“தியாக உழைப்பிற்கு பெரியவாளின் பரிசு”

(இவன் அப்பா-கணேச அய்யர்- அந்தக் காலத்திலே ,மடத்துக்11049507 989387704439728 8166044559461582433 n - 2026கு ஏராளமா கைங்கரியம் செய்திருக்கார்.மாச சம்பளம் (தலைமை சமையல்காரரான இவருக்கு மூணு ரூபாயோ,நாலு ரூபாயோ சம்பளம்!…) இப்படி,வாழ்க்கையைத் தியாகம் பண்ணி மடத்துக்கு உழைத்தவர்களை நினைச்சுண்டாலே,புண்ணியம்..”-பெரியவா)

சொன்னவர்-ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1907-ல் மகா சுவாமிகள்,பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றார்கள். அப்போது ஸ்ரீமடம் கும்பகோணத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தது
.
ஸ்ரீமடத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. முறையான வருமானம் இல்லாததாலும், ஸ்ரீமடத்தின் பூஜைப் பணிகளின் திட்டத்தை குறைத்துக் கொள்ள முடியாததாலும், அவ்வப்போது சில செல்வந்தர்களிடம் கடன் வாங்கும் நிலை இருந்து வந்தது.

சிப்பந்திகளுக்கு, சம்பளம் என்ற பெருந்தொகை கொடுப்பது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஜகத்குருவிடம் இருந்த பக்தி காரணமாகவே, பலர் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.’இது ஒரு புண்ணிய கைங்கரியம்’ என்ற மனப்பான்மை.

அந்தக் காலத்தில் வருமானத்தில் கண் வைக்காமல்,

‘புண்ணியப் பேறு’ என்ற மனப்பக்குவத்துடன் கணேசய்யர் என்பவர் சமையல் துறையைக் கவனித்துக் கொண்டிருந்தார். சமைப்பதும், அடியார்களுக்கு சாப்பாடு போடுவதும் தான் அவாருக்குத் தெரிந்த வேலைகள். அப்போது நிகழ்ந்த ஒரு மகாமகத்தின்போது, தான் ஒன்றியாகவே ஆயிரம் பேர்களுக்குச் சமையல் செய்து போட்டிருக்கிறார் என்றால், அவருடைய தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் எவ்வாறு புகழ்வது?…

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

வருடங்கள் கழிந்தன.

ஸ்ரீமடம், காஞ்சிபுரத்துக்கு வந்தாயிற்று .மக்கள் ஆதரவும் கணிசமாகக் கிடைத்தது. நிர்வாகத்தில், முற்போக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

ஓர் அன்பர், பெரியவாளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்றார்.

“என் பெயர் நடேசன், கும்பகோணம் மடத்தில்
சமையல்காரராக இருந்த கணேசய்யரின் பிள்ளை.

‘பெரியவாள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
“நீ என்ன பண்றே?”

‘பின்,ஏன் சிலவு பண்ணிண்டு இங்கே வந்தே?”

“பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. பெரியவா ஒத்தாசை பண்ணணும்..”

நாலைந்து நிமிடங்களுக்கு நிச்சப்தம். பெரியவா கண்களை மூடிக் கொண்டார்கள். சாம்பார் வாளியுடன் கணேசய்யர் தென்பட்டார்..!

‘அப்பாடா…என்ன உழைப்பு!…அவர் வேலை செய்யும் போது உடலில் வழியும் வியர்வை, ஓர் அண்டா நிறைய இருக்கும். அவர் பேத்திக்குக் கல்யாணம்.

அன்றைய தினம் பிக்ஷாவந்தனம் செய்வதற்காக ஒரு தனவந்தர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.

“ஜகதீசா, உன் பிக்ஷாவந்தனம் இன்னொரு நாள் செய்து கொள்ளலாம்.இப்போ இந்தக் கல்யாணத்துக்கு ஏதாவது உதவி செய்யேன்…”

ஜகதீசன், ‘பரமபாக்யம்’ என்று சொல்லி ,கன்னத்தில் போட்டுக் கொண்டார். அவருடைய மனைவி உடன்வர, நடேசனை ழைத்துக் கொண்டு ஓர் ஓரமாகப் போனார். மணி பர்சைத் திறந்து நடேசன் மேல் துண்டில் கொட்டினார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

‘ஒரு ரூபாய் மட்டும் வெச்சுக்கிறேன் சரியா?”

அம்மையார்,தன் பங்காக,ஒரு ஜோடி வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார்.

ஆவணி மாத ஆரம்பத்தில், கல்யாணம் புரட்டாசி கழித்து ஐப்பசி வந்தது.

நடேசனும் வந்தார்- பெரியவா தரிசனுத்துக்கு! வந்தனம் செய்துவிட்டுக் கைகட்டிக்கொண்டு ஓரமாக நின்றார். பெரியவாளிடம் எதுவும் பேசவில்லை.

பெரியவாள் எதிரில், புதிய வேஷ்டி-புடவை யாரோ ஒரு பக்தர்,காணிக்கையாக சமர்ப்பிந்திருந்தார். எதிரிலிருந்த மற்றப் புதிய துணிகளையும் ‘அவனிடம் கொடு’ என்று அணுக்கத் தொண்டருக்கு ஜாடை.

கண்களைச் சுழற்றி,எதிரே நின்றவர்களை நோக்கி ஒரு எக்ஸ்-ரே பார்வை.யாரோ ஒருவரிடம் பார்வை நிலைத்தது.

“நீ, மோதிரம் போட்டுண்டு இருக்கியோ?..”

“ஆமாம்”

“அதை, இவனுக்குக் கொடுத்துடேன்..”

அடுத்த விநாடி,ஆணை நிறைவேற்றப்பட்டது.

இன்னொரு பாக்கியசாலி பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

“அந்த ரிஸ்ட்-வாச்சை இவனிடம் கொடுத்துடு.
நீ வேறே வாங்கிக்கோ..”

ரிஸ்ட் வாச், கை மாறிற்று.

உடனே,நடேசனுக்குப் பிரசாதமும் வழங்கி உத்தரவு கொடுத்தாயிற்று.

அவர் போன பின்னர் பெரியவா சொன்னார்கள்.

“இவன் பொண்ணுக்குத் தலை தீபாவளி. அதைச் சொல்லத்தான் வந்தான். இவன் அப்பா-கணேச அய்யர்- அந்தக் காலத்திலே ,மடத்துக்கு ஏராளமா கைங்கரியம் செய்திருக்கார்.மாச சம்பளம் (தலைமை சமையல்காரரான இவருக்கு மூணு ரூபாயோ,நாலு ரூபாயோ சம்பளம்!…)
இப்படி,வாழ்க்கையைத் தியாகம் பண்ணி மடத்துக்கு உழைத்தவர்களை நினைச்சுண்டாலே,புண்ணியம்..”

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பக்தர்கள் நெகிழ்ந்தே போனார்கள் என்பதைச் சொல்ல வேண்டுமா,என்ன?

Related articles

Recent articles

spot_img