உலகில் பல நகரங்களிலும் ஒரு ரவுண்ட் வந்து, பலரது எச்சரிக்கைகளையும் வசவுகளையும் வாங்கி கட்டிக் கொண்ட கிகி சேலஞ்ச்சுக்கு இந்திய சினிமா நடிகையும் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்த ரெஜினா, தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றார். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு எல்லையே இல்லை.
தற்போது இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காரில் இருந்து இறங்கி வயல் வெளிச் சாலையில் கீகீ பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.




