இப்போது உற்சாகம் என்ற பெயரில் வந்துள்ளது ஒரு மரண விளையாட்டு. ஓடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து இறங்கி, காரை ஓடவிட்டு, அதனுள்ளிருக்கும் ஒருவரால் செல்லில் வீடியோ எடுத்து போடுவது..
ஓடும் காரில் இருந்து இறங்கி ஆட வைக்கும் இந்த ‘கிகி சேலஞ்ச்’ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரது கண்டனங்களையும் எதிர்ப்பையும், உலக அளவில் பல நாடுகளின் போலீஸாரால் கடும் எச்சரிக்கைகளையும் பெற்று வருகிறது.
This is what you look like from other side……. Humble request to Kaaki & Kaka, Stop this for the love of God…….. ? #kikichallenge pic.twitter.com/dwlH9V6CB8
— DEEP (दीप)? That’s My real Name ? (@ActDeep) July 31, 2018
இந்த வீடியோக்களைப் பார்த்த பலரும் தாங்களும் அது போல் முயன்று உயிரை இழந்துள்ளனர். அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் போடப் பட்டு வருகின்றன. இவற்றால் விபத்துகள் ஏற்படுவதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், சிலர் காரை கடத்திக் கொண்டு போவதும் கூட நடக்கிறது…
When #kikichallenge Goes Wrong..
Don’t do this non-sense challenges and keep your life risk
Police from around the world, inc in #India, #Spain, #US, #Malaysia & #UAE, have warned people that the dance challenge is dangerous & people caught trying it could face criminal charges pic.twitter.com/po8CVARgpR
— PaniPuri (@THEPANIPURI) July 31, 2018
வெளிநாடுகளில் பரவிய இந்த விஷ விளையாட்டு, இப்போது தலைநகர் தில்லி, மும்பை, ஹைதராபாத் என இந்திய நகரங்களிலும் பரவியது. இதை அடுத்து, ஹைதராபாத் போலீஸார், கீகீ சேலஞ்ச் என்ற பெயரில் யாராவது காரை விட்டு இறங்கி ஆட்டம் போட்டால், கம்பி எண்ண வேண்டி வரும் என எச்சரிக்கை விட்டனர்.
ஆனாலும் நடிக நடிகையர்களும் இந்த சேலஞ்சுக்கு போட்டி போடுவதால், இது எங்கு போய் முடியுமோ என பலருக்கும் இப்போது அடிவயிற்றில் கலக்கம் கொடுத்துள்ளது.
என்னடா உலகம் இது…!
#ReginaCassandra #KikiChallenge #kikichallange #kiki #InMyFeelingsChallenge #InMyFeelings #InMyFeelingsChallenege #drake #DrakeChallenge #SCORPION





