நஸ்ரியாவுக்குக் குவியும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

Published:

nazriya - 2026

நடிகை நஸ்ரியாவுக்கு இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்…

இதனிடையே கடந்த வாரம் நஸ்ரியா குறித்து ஒரு தகவல் வெளியானது. அதற்கும் சேர்த்து இப்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். அது, எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதுதான்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அடுத்து தீரன் அதிகாரம் படத்தை இயக்கிய வினோத்துடன் இணைந்துள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

கடந்த வாரம்தான் தல 59 என்று கூறப்படும் படத்தின் பூஜை நடந்தது. பூஜையின் போது மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமையக்கிறார். எனவே யுவன் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் இளசுகளின் கனவு கன்னியான நடிகை நஸ்ரியா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

சில மாதங்களாகவே நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அஜித் பற்றிய செய்திகளை பதிவிட்டு வந்தார். அப்போதே அவர் அஜித்துடன் நடிக்க இருக்கிறாரோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. தற்போது அது உறுதியாகிவிட்டது.

பிங்க் படத்தின் ரீமேக் என்று இந்தப் படம் கூறப்படுவதால், டாப்ஸி நடித்த கதாபத்திரத்தில் நஸ்ரியா நடிப்பார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related articles

Recent articles

spot_img