
ஊடகத்தில் பணியாற்றிய பலர் சினிமா வாய்ப்பு பெற்று அப்படியே திரைத்துறைக்கு தாவியிருக்கிறார்கள். விகடன் போன்ற சினிமாத்துறைக்கு தொடர்புடைய இதழ்களில் பணி புரியும் செய்தியாளர்கள் பலர், திரைத்துறையினருடனான தொடர்பால், தாங்களும் மாறியிருக்கின்றனர். கார்டூனிஸ்டாக இருந்து இயக்குனரான சிம்புதேவன் போன்ற உதாரணங்கள் பல உண்டு.
தனியார் செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளர்களாகவும், காம்பைரிங் செய்யும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகவும் இருந்து பின்னர் நடிகைகளாக, துணை நடிகையராக வலம் வந்தவர்களும் உண்டு.
ஆனால், மிக வித்தியாசமாக பத்திரிகையாளராக பணியைத் துவங்கி, செய்தி ஊடகத்தில் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து, நாட்டு நடப்புகளுடனேயே முழு நாளையும் போக்கி வந்த ஒருவர், திடீரென சினிமாவில் நடிக்க வருவதென்பது அதிசயமானதுதான்! தந்தி டிவி., மூலம் அந்தப் பிரபலத்தை அடைந்த ரங்கராஜ் பாண்டே இப்போது தல அஜித்துடன் நடிக்கப் போகிறார் என்பதுதான் செய்தி. அவரே இதனைத் தம் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித் கைவசம் சிவாவின் ‘விஸ்வாசம்’ மற்றும் இயக்குநர் வினோத் படம் என 2 படங்கள் உள்ளன. இதில் வினோத் இயக்கும் படம், அஜித்துக்கு 59வது படம். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது ‘Bayview Projects LLP’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பதுதான் செய்தி!

ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக இது வெளிவருகிறது. இதில் அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் வெர்ஷனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை நஸ்ரியா, கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
பிங்க் படத்தில் பியுஷ் மிஸ்ரா நடித்திருந்த கேரக்டரில் நடிக்க பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கமிட்டாகியுள்ளாராம்.




மிகவà¯à®®à¯ விதà¯à®¯à®¾à®šà®®à®¾à®© பதà¯à®¤à®¿à®°à®¿à®•ையையாளராக, செயà¯à®¤à®¿ ஊடகதà¯à®¤à®¿à®²à¯ ஒர௠தலைமை ஆசிரியராக சிறபà¯à®ªà®¾à®© நறà¯à®ªà¯†à®¯à®°à¯à®•ளைபà¯à®ªà¯†à®±à¯à®± திரà¯. à®°à®™à¯à®•ராஜ௠பாணà¯à®Ÿà¯‡ சினிமாவில௠நடிகராகவà¯à®®à¯ வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯.