iniya 1 - 2026‘மியா’ என்கிற இசை ஆல்பத்தை தனது ‘அமையா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பாக சொந்தமாக தயாரித்து வெளியிட்டுள்ளார் நடிகை இனியா.

சற்குணம் இயக்கத்தில்  தேசிய விருது பெற்ற படமான ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் இனியா.

இந்த ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர். ‘மியா’ வீடியோ ஆல்பத்தின் கான்சப்ட் ‘LETS DANCE’ என்கிற சர்வதேச நடனப் போட்டியில் கலந்துகொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கும் ஒரு பெண்ணுக்கு எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்றுக்கொடுக்கிறார். அந்தப் பெண்ணை வெற்றிபெறச் செய்கிறார்.

கற்றுக்கொள்ளும் மியா என்ற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ‘DIVO’ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ‘U1’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா!

எதிர் காலங்களில் தனது சொந்த நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம் இனியா. அவரே கதாநாயகியாக நடிக்கயிருக்கும் படத்துக்காக  கதைகள் கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending