மீண்டும் மீனா ராஜ்கிரணுடன் இணைகிறார் !

சினி நியூஸ் சினிமா

baaby meena - 2026குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமான மீனா,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1990களில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.meena - 2026அன்புள்ள ரஜினி காந்த்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா பின்பு ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார், கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், அர்ஜூன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். meena now - 20261991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இந்தப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருப்பார். அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பரவியது.raj kiran - 2026இதைத்தொடர்ந்து ராஜ்கிரணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து கதாநாயகனாகவும், தவமாய் தவமிருந்து, சண்டக்கோழி, காவலன், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார்.rajkiran - 2026கடைசியாக அவர் நடிப்பில் சண்டக்கோழி-2 படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் ‘ஷைலாக்’ என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிகை மீனா ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.