லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிந்திரன் நட்பு என்னானு தெரியுமா படத்தை தயாரித்தவர், யோகிபாபுவின் கூர்கா படத்தை விநியோகம் செய்தவர்.
இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பற்றி அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் ரவீந்திரன் கூறுகையில், விநியேகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்தில் அஜித் நடித்திருக்கும் நேர அளவு குறித்தும், படத்தின் கண்டன்ட் குறித்தும், வணிகரீதியான பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
என்னை பொறுத்தமட்டும் இந்த படம் குறித்து எங்கு விசாரிக்க வேண்டுமோ அங்கு விசாரித்ததில் படம் அல்டிமேட்டாக இருக்கிறது .இது படத்தின் உண்மையான, மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து எனக்கு கிடைத்த செய்தி . இந்த படம் மிகப்பெரும் வெற்றியடையும் என்று எனக்கு நம்பிக்கை இருந்ததால் விநியேக உரிமைக்கு தொடர்புகொண்டேன்.
மற்ற யாருக்கும் இல்லாமல் எனக்கு மட்டும் படத்தை விநியேகம் செய்ய நிபந்தனைகள் முன்வைத்தார்கள். சொன்ன நேரத்தில் முன்பணம் கொடுக்கவேண்டும், ஒப்பந்தம் போடாமல் வெறும் லெட்டர் ஹெட்டில் தான் தருவோம் எனவும், என்னுடைய லோகோவை பயன்படுத்த கட்டுப்பாடு, அதிக விலை என்பன போன்ற கட்டுப்பாடுகளை நான் எதிர்கொண்டேன் .
இத்தனைக்கும் படத்தை நான் குறைந்த விலைக்கு கேட்கவில்லை அதிக விலைக்கு தான் கேட்டேன். அது நடக்கவில்லை. இது ஏன் எனக்கு மட்டும் என பார்த்தால் அஜித் படம் பண்ண எனக்கு என்ன தகுதி இருக்கிறது என எண்ணுகிறார்கள். இந்நிகழ்ச்சி என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. என்னுடைய நிறுவனம் சின்ன படங்கள் மட்டும் விநியேகம் செய்யாது என நிரூபிக்கவே முயற்சி செய்தேன்.
எனக்கென்று சில உணர்ச்சிபூர்வமான யோசனைகள் இருந்தது. அதன்படி இந்த படம் கிடைத்திருந்தால் கொண்டாடி இருப்பேன். தல படம் என்னை கைவிடாது என நம்பிக்கையோடு இருந்தேன். படம் நன்றாக வந்துள்ளது. யாரிடம் படம் சென்றாலும் இது மாபெரும் வெற்றிபெறுவது உறுதி என்று கூறியுள்ளார்.



