தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானர். விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவர், நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் படம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. அந்தப் படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதனால், தற்போது தனது அடுத்தபடத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார்.இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறதுபாலிவுட் நடிகைகள் என்றாலே எப்போதும் ஸ்லிம்மாக காட்சியளிப்பாளர்கள். ஆகையால், நடிகை கீர்த்தி சுரேஷும் அவர்களைப் போல தானும் இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து தன் எடையை பல மடங்கு குறைத்து தற்போது ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இணையத்தில் உலவும் கீர்த்தியின் உடல் எடை குறைந்த புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari