சண்முகராஜ் இயக்கத்தில் வெளியான ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி எனும் படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இந்த படத்திற்கு பிறகு தனியார் செய்தி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார்.சரண்யா, ராகுல் என்பவரை காதலித்து வருகிறார்.
விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சரண்யா வீட்டில் தான் இருக்கிறார்.
இந்நிலையில் ராகுலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சரண்யா, “இந்த பிறவியை கடந்திட நீ போதுமே.. உன் தோளில் மீண்டும் சாய்ந்திட இந்த ஊரடங்கு முடியும் வரை காத்திருக்க முடியவில்லை”, என குறிப்பிட்டுள்ளார். கூடவே கொரோனா சமயத்தில் காதல் நினைவுகள் என ஹேஷ்டாக் ஒன்றையும் உருவாக்கியுள்ளார் சரண்யா.