வீட்டில் வாடைக்கு இருப்பவர்களை எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்க வேண்டும்
நடிகர் நகுல் மற்றும் வரலஷ்மி கொரோனா பீதியால் மக்கள் சிலர் செய்யும் தவறுகளை வீடியோக்கள் மூலம் சுட்டிக்காட்டி உள்ளனர்.
சென்னையில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் . இதில் பலர் வெளியூர் மக்கள் தான். அவர்களின் ஏகப்பட்ட பேர் வசிப்பது வாடகை வீடுகளில் தான். தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஏறக்குறைய அத்தனை வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பல சொந்த வீட்டுக்காரர்கள் வீட்டு வாடகை வசூலிப்பதாகவும். வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்பியவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களும் மற்றும் சில தொழிலாளர்களுக்கும் அஞ்சி வீட்டை தர வீட்டு உரிமையாளர்கள் மறுப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இந்த பிரச்சனை சென்னையை தாண்டி தமிழகத்தின் மற்ற நகரங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
Just a thought.. take it or leave it..the choice is yours… #CoronavirusLockdown pic.twitter.com/BjzKbiDWrk
— ????????? ??????????? (@varusarath) March 24, 2020
இதற்காக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் நகுல் ‘ லூசாடா நீ ‘ என்று திட்டி கோபம் கொண்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் தான் நாம் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். இப்போது மனிதநேயமற்ற செயலை செய்வது தவறு என்று கோபமாக திட்டியுள்ளார். வரலஷ்மி வெளியிட்டுள்ள காணொயில், இந்த நேரத்தில் நாம் வீட்டில் இருப்பது மிகவும் அவசியமாகும்.
அப்படி இருந்தால் மட்டுமே நாம் இயல்பு நிலையை திரும்பி மீட்டெடுக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த நேரத்தில் யாருக்கும் வேலைகள் கிடையாது இதனால் சிலருக்கு தாமதமாக சம்பளம் கிடைக்கலாம் சிலருக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் மக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வீட்டில் வாடைக்கு இருப்பவர்களை எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் யாரும் பயந்து போய் எல்லா பொருட்களையும் வீட்டில் வாங்கி குவிக்க வேண்டாம் அடிபடை தேவைகள் கிடைக்கும் கடைகளை பார்த்தேன் அதனால் பயந்து யாரும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார். சரத்குமார் வெளியிட்டுள்ள காணொலியில், இந்த ஊரடங்கு உத்தரவு நம்மில் துவங்கி இந்த உலகத்திற்கான ஒன்று அதை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
#TamilNadulockdown #StayAtHomeOrder #StayHomeStaySafe #StayHomeSaveLives pic.twitter.com/GDkJDAclUI
— R Sarath Kumar (@realsarathkumar) March 24, 2020
இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 வரை உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரலாறு காணாத பல வீழ்ச்சியை பல தொழில்களும் சந்தித்து வருகிறது. இருந்தும் மக்களை தொடர்ந்து இந்த கொரோனாவை எதிர்த்து போராட பலரும் பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.