கன்னித்தன்மை குறித்து ரசிகர் கேட்ட கேள்வி! காட்டமாய் பதிலளித்த நடிகை!

சினி நியூஸ்

கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்

மலையாள நடிகையான சம்யுக்தா மேனன், தமிழில் களரி, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவிலும் தற்போது சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சம்யுக்தா வீட்டில் ஜாலியாக ஓய்வெடுத்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சம்யுக்தா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நேற்று உரையாற்றினார்.

a6e57046f245f963ca227e48d6817afa - 2026

அப்போது அதுல் என்பவர் நீங்கள் வெர்ஜினா? (கன்னித் தன்மையுடையவரா) என கேள்வி கேட்டார்.தைரியத்துக்கு பெயர் போன சம்யுக்தா, அந்த கேள்வியை தவிர்க்காமல் நெத்தியடி பதில் ஒன்றை அளித்தார். “ஹாஹா… மரியாதைக்குரிய அதுல் பிகே, வெர்ஜினிடி, செக்ஸ், ஆல்கஹால் உள்ளிட்டவை பற்றி கேட்டால் பெண்கள் பயந்து விடுவார்கள் என நினைக்கிறீர்களா? இல்லை இப்படி ஒரு கேள்வி கேட்டால் தனியாக தெரிவோம் என நினைக்கிறீர்களா?எந்த பெண்ணை பார்த்தாலும் பொதுவாகவே நீங்கள் இப்படி தான் யோசிப்பீர்களா. உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. உங்களுடைய போக்கு சரியானது அல்ல.

0d20330a50ca7b9ac4c5eeb67a684480 - 2026

கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். யாரிடமாவது அடி வாங்கிவிட போகிறீர்கள்” என விளாசினார்.சம்யுக்தாவின் இந்த பதிலை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இனிமேலாவது நடிகைகளை பார்த்து இப்படிப்பட்ட கேள்விகளை கேட்காமல் இருப்பார்கள் என அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.