
கொத்தவரங்காய் உசிலி :
தேவையானப் பொருட்கள் :
கொத்தவரங்காய் – 200, துவரம் பருப்பு- 100 மஞ்சள் தூள்- அரை ஸ்பூன், புளி- கொட்டைப்பாக்கு அளவு, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு -அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு- அரை ஸ்பூன், வெங்காயம்-1, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – 4 ,உப்பு- தேவையான் அளவு. பெருங்காயம்- சிறிது.
செய்முறை :
துவரம் பருப்பையும், கொத்தவரங்காயையும், தனித்தனியாக வேகவைத்து, மஞ்சள்தூள் சேர்த்து மிளகாய்த்தூள்,உப்பு போட்டு புளிக்கரைசல் விட்டு கொதிக்க வைக்கவும். வெங்காயம்,கடுகு, உளுத்தம்பருப்பு,தாளித்து,பச்சைமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்,



