வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது. தற்போதைய சூழலில் அதுவும் சாத்தியமில்லாத ஒன்று.
நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்கிறார்.
படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இனிமேல் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. மேலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது. தற்போதைய சூழலில் அதுவும் சாத்தியமில்லாத ஒன்று. இதனால் வலிமை படம் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.