கருணாசுடன் ஹீரோயினாக அம்பாசமுத்திரம் அம்பானி என்ற தமிழ்ப் படத்தில் நடித்த நவநீத் கௌர், இன்று எம்பி ஆகியுள்ளார்! மிகப்பெரும் ஆச்சரியமூட்டும் விஷயமாக இது மகாராஷ்டிர மாநிலத்தில் பார்க்கப்படுகிறது.
எப்படி இவர் இந்த அளவுக்கு வெற்றி பெற்றார் என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படுகின்றனர்!
அமராவதி எம்பி நவநீத் கௌர் ராணாவைப் பார்த்துதான் இந்த ஆச்சரியமெல்லாம்! இத்தனைக்கும் இவர், சிவசேனா கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர், ஐந்து முறை எம்பியாக இருந்த அனந்தராவ் வசூலை தோற்கடித்ததுதான்! அதுவும், சுயேச்சையாக நின்று, அனந்தராவ் வசூலை 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரது மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளார் நவ்நீத் கௌர்.
மகாராஷ்டிராவில் வீசிய மோடி அலையில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக சிவசேனா கூட்டணி ஒட்டுமொத்தமாக அள்ளியது! ஆனாலும் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நவநீத் கௌர் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்! இவரது வெற்றியை எந்த அரசியல் கட்சிகளாலும் நம்பக் கூட முடியவில்லை!
இதனால் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரை எங்கள் பக்கம் வந்து விடுங்கள் உங்கள் அரசியல் வாழ்க்கையை உச்சத்திற்கு எடுத்துச் சொல்கிறோம் என்று நவநீத் கௌர்க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்!
ஆனால் நவ்நீத் கௌரோ, எனக்கு பிரதமர் மோடி மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது அதனால் பாஜகவை எனக்கு பிடிக்கும்! மற்ற அரசியல் கட்சிகள் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்று வெளிப்படையாகவே கூறி விட்டார்!
மகாராஷ்டிர அரசியலில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் நவ்நீத் கௌர். 1986 ஜனவரி 3ம் தேதி பிறந்த நவ்நீத் கௌர்க்கு இப்போது 33 வயதாகிறது. திருமணமான இவர், கடந்த முறை கணவரின் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால் இந்த முறை வெற்றி பெற்றுவிட்டார்.


