அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
சுனைனாவும் கிருஷ்ணாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொல்லப் போவதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
2005ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்த சுனைனா, 2008ம் ஆண்டு தமிழில் நகுலுக்கு ஜோடியாக ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் நகுலுடன் இணைந்து ‘மாசிலாமணி’ படத்தில் நடித்தார். இதனால் இருவருக்குமிடயே காதல் என்று கிசு கிசுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, விஷாலுடன் சமர், தெறி என பல படங்களில் நடித்து உள்ளார். இவர், விஜய் சேதுபதி – கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘வன்மம்’ படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தார். அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அதே 2014ம் ஆண்டு ஹேமலதா என்பவரை கிரஷ்ணா திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்ததால் அடிக்கடி சண்டைசச்சரவுகள் வந்தன. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினை காவல் நிலையம் வரை சென்றது. ஹேமலதா மற்றும் கிருஷ்ணா இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். இறுதியாக 2016ம் ஆண்டு ஹேமலதாவை விவாகரத்து செய்தார் கிருஷ்ணா. இதையடுத்து, மன உளைச்சலிருந்து மீண்ட கிருஷ்ணா மீண்டும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
இந்த காலகட்டத்தில் தான் சுனைனா- கிருஷ்ணா இடையே இருந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. சுனைனாவும் கிருஷ்ணாவும் காதலிப்பதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் கிசு கிசுக்கின்றன கோலிவுட்