அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்
பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர் லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர், மும்பை, லக்னோ என விமானத்தில் சுற்றியிருக்கிறார்.
அதோடு கடந்த 15ஆம் தேதி லக்னோவில் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
அவரால் உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் 3 எம்பிக்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். கனிகா கபூரால் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கும் என அஞ்சப்பட்டது. அவர்களில் எம்பி துஷ்யந்த் குடியரசுத் தலைவரை சந்தித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவருக்கு உடனடினயாக கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் கனிகா கபூர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது கொரோனா சோதனை ரிப்போர்ட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தவறாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கனிகா கபூரின் வயது 41 என்பதற்கு பதிலாக 28 என இருப்பதாகவும், அவரது பாலினம் பெண் என்பதற்கு பதில் ஆண் என இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கனிகா கபூர் தனக்கு ஈக்கள் மொய்த்த 2 வாழைப்பழங்களையும், ஒரே ஒரு ஆரஞ்சு பழமும் மட்டும் கொடுத்தாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னை ஒரு குற்றவாளியை போல் நடத்துவதாகவும் பாடகி கனிகா கபூர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி விட்டுள்ளார்.