இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார்.
அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆன, தெலுங்கு படம், ‘அலா வைகுந்தபுரம்லோ’.
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.
த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. பல படங்களின் சாதனைகளை உடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. படம் பழைய கதையை கொண்டதுதான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் இந்தப் படம் பெரிய ஹிட்டாகியுள்ளது. திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்தப் படம் ரிலீஸ் ஆன ஒரு நாளுக்கு முன்பாக, தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ்பாபு நடித்த, சரிலேரு நீக்கெவ்வரு படம் ரிலீஸ் ஆனது. இதில், ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, 13 வருடத்துக்குப் பிறகு இதில் நடித்துள்ளார். இந்தப் படமும் ஹிட்டானது. ஒரே நேரத்தில் அல்லு அர்ஜுன் படமும் இந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது.
மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்கள் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தைப் பார்ப்பதாக வினியோகஸ்தர்கள் கூறி இருந்தனர். இந்தப் படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். இதை அவரே இந்தியிலும் ரீமேக் செய்ய இருக்கிறார். இந்தியில் நடிக்கும் நடிகர்கள் முடிவாகவில்லை.
படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாகி இருந்த நிலையில், புட்ட பொம்மா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். நடனமும் விஷூவலும் இந்தப் பாடலில் ரிச்சாக இருப்பதால் ரசிகர்கள் அடிக்கடி பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த பாடல் யூடியூப்பில் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது.
இதை, அல்லு அர்ஜூன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை பார்க்கின்றனர். அடுத்த ஹிட் பாடல் வரும் வரை, இந்தப் பாடல் இன்னும் சில மாதங்கள் யூடியூப்பில் கொடி கட்டி பறக்கும் என்கிறார்கள்.
[embedded content]