மும்பையில் முகாமிடும் சூர்யா

surya13அஞ்சான் படத்தையடுத்து சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படதில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு 8ம் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறது. இதற்காக மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுவிட்டதாம். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் 6 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் 24 என்ற படத்தை இயக்கவுள்ளார். சூர்யா தற்போது நடித்துள்ள மாஸ் படம் மே 1ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இச்செய்தி பற்றிய தங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்