
பெண் பலவந்தப் படுத்தியதால் தாலி கட்டினான். அனைவர் முன்பும் திருமணத்திற்கு நிராகரித்தான் வேதனை அடைந்த பெண் காதலனை கத்தியால் குத்தி கொன்றாள்.
காதலிப்பதாக கூறி பின்தொடர்ந்தான்… யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தாலி கட்டினான். பகிரங்கமாக திருமணத்திற்கு நிராகரித்தான். மேலும் அவள் மீது சந்தேகப்பட்டு காதலியை வேதனைக்கு உள்ளாக்கினான். சோஷியல் மீடியாவில் தவறாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினான். இந்த வேதனையையும் அவமானத்தையும் தாங்க இயலாமல் சமயம் பார்த்து இளம்பெண் அவனை கத்தியால் குத்திக் கொன்றாள்.
இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் திங்கள் இரவு நடந்தது. தாள்ளபூடி மண்டலம் மலகபல்லி கிராமத்தை சேர்ந்த கர்சிகூடி பாவனி என்ற பெண் கொவ்வூரு ஏபிஎன் அண்ட் பிஆர்ஆர் கல்லூரியில் டிகிரி படித்து வருகிறாள். அப்பெண் இன்டர் படித்து வந்த சமயத்தில் அம்படி கருணதாதாஜி நாயுடு என்ற இளைஞன் காதல் என்று சொல்லி அவளை வலையில் வீழ்த்தினான். சில மாதங்கள் இருவரும் நெருக்கமானார்கள்.
ஆனால் திருமணப் பேச்சை எடுத்தாலே இருவரின் குலமும் வேறு என்று அவன் திருமணத்திற்கு மறுத்தான். இருப்பினும் இளம்பெண் அழுத்தம் கொடுத்ததால் திருட்டுத் தாலி கட்டினான். சில காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் அனைவர் முன்பும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பாவனி கேட்டபோது முடியவே முடியாது என்று மறுத்துவிட்டான்.
அதுமட்டுமன்றி பாவனி மீது சந்தேகப்பட்டு சோஷல் மீடியாவில் அவளைப் பற்றிய தீய பிரச்சாரம் செய்யத் தொடங்கினான். அவனுடைய கொடுமைகள் தாங்காமல் இளம்பெண் தன் சொந்த கிராமமான மலகபல்லிக்கு வந்துவிட்டாள்.
திங்களன்று அவளுக்கு போன் செய்து உன்னோடு பேசவேண்டும் என்று கூறி ஐ. பிங்கடி ஜங்ஷனுக்கு வரும்படி தாதாஜி நாயுடு அவளிடம் கூறினான். அதனால் பாவனி அங்கு சென்றாள். அதன் பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நேர்ந்தது. தன்னை வீட்டுக்கு அருகில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்று அவள் கேட்டுக் கொண்டதால் மோட்டார் சைக்கிள் மீது இருவரும் கிளம்பினார்கள்.
ஆனால் அவனுடைய நடவடிக்கையில் மிகவும் மன வேதனைக்கு உள்ளான அவள் அவனை கொன்று விட வேண்டுமென்று தீர்மானித்தாள். அதற்குமுன் ஆன்லைனில் வாங்கிய கத்தியால் அவனை குத்தத் தொடங்கினாள். தர்மவரம் கிராம எல்லை வந்தவுடன் தாதாஜி நாயுடுவின் கழுத்தில் ஒரே குத்து. அதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவன் கீழே விழுந்தான்.
அப்படியும் கீழே விழுந்து அவனை மீண்டும் பல இடங்களில் கத்தியால் ஆத்திரம் தீர குத்தினாள். சம்பவ இடத்திலேயே அவன் மரணமடைந்தான். அதன்பின் பாவனி போலீசாருக்கு போன் செய்து செய்தி தெரிவித்து சரணடைந்தாள். ரூரல் எஸ்ஐ கே.ராமகிருஷ்ணா சம்பவ இடத்துக்கு வந்து விவரங்களை சேகரித்து விசாரணையைத் தொடங்கினார்.