நிஜ வாழ்வில் ஒப்பனையற்ற மனிதர் அஜித்! ஒப்பனை கலைஞர் கூறும் நெகிழ்ச்சி சம்பவம்!

நள்ளிரவு 12 மணியை தாண்டிய அந்த நேரத்திலும்

நமது தொழில் வட்டத்திலிருப்பவர் எளியவராக இருந்தாலும், அவரையும் நேசி! முழுதாக அன்பு கொள்! இதுதான் அஜீத்தின் பலவருஷ பாலிஸி. ஊர் என்ன சொன்னாலும், ‘என் வழி தனி வழி’ என்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதை வலியுறுத்துவது போல நடந்த அந்த சம்பவத்தை தற்போது கேட்க நேர்ந்தது. அஜீத் ரசிகர்களும் கொண்டாடட்டுமே என்பதால் அது அப்படியே இங்கே.

0185453f5c673a2e5948696773e823d1 - 2026

அஜீத்தின் மகன் ஆத்விக் பிறந்த நாள் கடந்த 2 ந் தேதி சென்னையிலிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அஜீத்தின் உறவினர்களும், நெருங்கிய நட்பு வட்டாரமும் அழைக்கப்பட்டிருந்தனர். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அங்கு வந்திருந்தார்கள். முன்னதாக மனைவி ஷாலினிக்கு மேக்கப் அலங்காரம் செய்வதற்கு ஒரு மேக்கப் மேனை அஜீத்தே ஸ்பெஷலாக போன் செய்து அழைத்திருந்தார்.

358ef1869b48cc398f378c55f3e96156 - 2026

குறித்த நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்ற மேக்கப் மேன் ஷாலினிக்கும் ஷாம்லிக்கும் சேர்த்தே மேக்கப் செய்திருக்கிறார். விருந்தினர்கள் வந்தபின் அவர்களோடு பேசுவது, போட்டோ எடுத்துக் கொள்வது என்று செம பிசியாகிவிட்ட அஜீத், எல்லாரும் கலைந்து போன பின்தான் இவரை தேடியிருக்கிறார். “நான் வரச்சொன்ன மேக்கப் மேன் போயிட்டாரா?” என்றாராம் ஷாலினியிடம்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

“அப்பவே போயிட்டாரே…” என்று கூறியிருக்கிறார் அவர். “ஐயோ சம்பளத்தையும் வாங்கல. சாப்பிடவும் இல்ல போலிருக்கே?” என்றவர், நள்ளிரவு 12 மணியை தாண்டிய அந்த நேரத்திலும் போன் அடித்துவிட்டார் மேக்கப் மேனுக்கு. “தம்பி… நீங்க சாப்பிடாம போயிட்டீங்க போலிருக்கு. சம்பளமும் வாங்காம போயிட்டீங்க. கெஸ்ட் நிறைய பேர் வந்ததால் உங்களை கவனிக்க முடியல. ஸாரி…” என்று கூற, எதிர்முனை கரகரவென அழ ஆரம்பித்துவிட்டது. “ஐயோ சார்… நான் ஒரு பெரிய ஆள்னு எங்கிட்ட போய் சாரியெல்லாம் கேட்கிறீங்க. நான் சாப்பிட்டுதான் வந்தேன்” என்று ஒரு பொய்யை சொல்லி சமாளித்திருக்கிறார்.

1bce191bed3f18ce84388105e9cd7937 - 2026

மறுநாள் வெளியூர் செல்லவேண்டி இருப்பதை அவரிடம் சொன்ன அஜீத், “உங்களை நான்தான் போன் பண்ணி வரச்சொன்னேன். என் கையால உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இல்லேன்னா வீட்ல வந்து வாங்கிக்க சொல்லிடுவேன். என்ன பண்றது?” என்று கவலைப்பட… “இல்ல சார். அது ஒரு விஷயமே இல்ல. நீங்க இருக்கும்போதே நான் வர்றேன் ” என்று கூறினாராம் அந்த மேக்கப் மேன். ஒப்பனையற்ற ஒப்பற்ற மனிதர் அஜித் எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விஷயம். 

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories