சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் அருண் விஜய்.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

Published:

arun vijay

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நடித்து வந்தாலும் தற்போதுதான் வெற்றி படங்களை கொடுக்க துவங்கியுள்ளார் அருண் விஜய். இவர் நடித்த தடம் திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகராக மாற்றியது. தற்போது பாக்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக உடம்பை ஏற்றியுள்ளார்.

இப்படத்திற்கு பின் ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண்விஜய்க்கு ரெஜினா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அறிவழகன் பிரம்ம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் ஆவார். ஏற்கனவே அருண் விஜயை வைத்து குற்றம் 23 என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img