45 வருட திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… அண்ணாத்தே கடைசி படமா?..

சினி நியூஸ்

rajini

பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ என பதிவிட்டுள்ளர். அவரின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சிறுத்தை சிவா இயகத்தில் அவர் நடித்து வரும் அண்ணாத்தே படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.எனவே, அதை நடித்து கொடுப்பது என் கடமை என ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஜினிக்கு வயது 70 ஆகிறது. மேலும், அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்துவிட்டார். எனவே, ரஜினி நடிக்கும் கடைசி படம் ‘அண்ணாத்தே’ வாகத்தான் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நடிகர் ரஜினியை திரையில் காண முடியாது என்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ரஜினியை இனிமேல் அவர்கள் அரசியல்வாதியாக பார்ப்பதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.