மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பிக்கு கொரோனா!

சினி நியூஸ் சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனும் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும் ஆவார்.

பிரபல கன்னட நடிகர் துருவா சார்ஜா மற்றும் அவரது மனைவி பிரானா சார்ஜா இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாக உள்ளது. இவர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனும் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும் ஆவார்.

சில தினங்களுக்கு முன்புதான் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்தது. நடிகர் அர்ஜுன் இவரது பிரிவைத் தாங்கமுடியாமல் கதறி அழுத புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

7d23ea3d510bf0e3da454ea978fd974a - 2026
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பதிவிட்ட துருவா சார்ஜா “நானும் எனது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. எங்களுக்கு சிறிய அறிகுறிகள் தெரிந்ததும் நாங்கள் மருத்துவமனையில் சேர்ந்து விட்டோம். நாங்கள் நலமாக வீடு திரும்புவோம் என்று உறுதியாக நம்புகிறோம். எங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதிச்சடங்கில் பலர் கலந்துகொண்டிருந்தனர். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட யாருக்கேனும் கொரோனா இருந்திருக்கலாம் என்றும் சமூக இடைவெளியை சரியாகக் கடைபிடிக்காததால் பரவியிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.