புதிய வைரஸால் சிறுவன் உயிரிழப்பு! இந்த இறைச்சியை உண்ணாதீர்கள் என அறிவுறுத்தும் மருத்துவர்கள்!

உலகம் சற்றுமுன்
dead body

சீனாவில் உள்ள வுகாண் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தினமும் ஆயிரக்கணக்கில் இந்த வைரஸால் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சீனாவில் புதிதாக புபோனிக் பிளேக் என்ற புதிய தொற்று ஒன்று பரவ ஆரம்பித்து உள்ளது. மேலும் காட்டில் வாழும் மர்மோட் போன்ற கொறித்துண்ணி உயிரினங்களிடம் இருந்து தான் இந்த தொற்று பரவும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பிறகு இறக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் பகீர் தகவலை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் மங்கோலியா மேற்கு மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இந்த புபோனிக் பிளேக் என்ற தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை அடுத்து இந்த நோய் தொற்றானது பரவும் அபாயம் இருப்பதால் சீனா மற்றும் மங்கோலியா நாட்டில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாது மர்மோட் என்ற இறைச்சி வகையை சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.