
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர் பிரேம், அஜித்தை முதல்முதலாக சந்தித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
அஜித்துடன் ஒருநாள் டின்னர் சாப்பிட்டதாகவும், அன்றைய தினம் அவரிடம் இரவு ஒரு மணி வரை அரசியல் சினிமா உள்ளிட்ட பல விஷயங்களை பேசியதாகவும் கூறிய பிரேம், அஜித் எல்லாத்துறையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் அப்டேட்டில் வைத்துள்ளதாக கூறினார்.
மேலும் தனது மகனுக்கு அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும் என்றும் அன்றையை தினம் அஜித் தனது மகனுடன் போனில் பேசியதால் அந்த சந்தோஷத்தில் எனது மகன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும் கூறினார்.



