
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருபக்கம் அரசியல்வாதிகளும் இன்னொரு பக்கம் திரையுலக பிரமுகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் இதுகுறித்து தனது கருத்தை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
“காவிரி மேலாண்மைக்கு நாம் போராடும்போது இந்த கோரிக்கையை முன்னிறுத்துவோம். காவிரி மற்றும் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெட்ரோல் எடுக்கும் பகுதிகளைப் பாதுகாக்கும் நாம் ஏன் உண்ணும் உணவிற்காக விவசாயத்திற்காக அதை செய்யக்கூடாது. அப்படி அறிவிக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மணல் கொள்ளை, ஹைட்ரோகார்பன், ஆலை விதிமீறல்கள் போன்ற எதையும் செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்,.
Very important . #CauveryWaterManagement #CauveryManagementBoard pic.twitter.com/ZJX6bz5eeq
— G.V.Prakash Kumar (@gvprakash) April 1, 2018



