thullatha manamum thulum - 2026

சிறுவர்களின் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் பட கிளைமாக்ஸ்! வைரல்!

சினி நியூஸ் சினிமா
thullatha manamum thulum - 2026

இயக்குநர் எழில் இயக்கியிருந்த படங்களில் துள்ளாத மனமும் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்த இப்படம் 1999ஆம் ஆண்டு வெளியானது.

குட்டி, ருக்கு என்ற இரண்டு கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு இன்றுவரை ஃபேவரைட். குட்டி கதாபாத்திரத்தில் காதல், ஆக்‌ஷன், சென்ட்டிமெண்ட் ஆகிய காட்சிகளில் விஜய் நடித்து துள்ளாத மனமும் துள்ளும் படத்தை ஒரு க்ளாசிக் படமாக அமைந்தது.

ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்த இந்த திரைப்படம் விஜய்க்கு இன்றளவும் பெரிதாக பேசப்படும் திரைப்படமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் இசையும்தான்.

படம் தொடங்கியது முதல் இறுதி வரை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் கதை நகர்ந்து இறுதிக்கட்டத்தில் படம் விறுவிறுப்பை பெறும்.

இந்த படத்தில் வரும் இறுதிகட்ட காட்சிகள் பார்ப்போரை இன்னும் கண்கலங்க வைத்து, சீக்கிரம் இரண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வை கடவுளே என்று கதறும் அளவுக்கு அருமையான காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்தநிலையில், துள்ளாத மனம் துள்ளும் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை தத்ரூபமாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நடித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பதிலாக வைகை புயல் வடிவேலு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட இருந்தார்.

அந்த பாத்திரத்திற்கு வடிவேலு சரியாக இருப்பார் என நினைத்து அவரிடம் எழில் கதை கூறினார். கதையை கேட்ட வடிவேலுவுக்கு கதை பிடித்துப்போக இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் அவரை தடுத்தது.

இந்த சூழலில் படத்தை தயாரிக்க முன்வந்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தன்னிடம் விஜய்யின் தேதி இருப்பதாகவும், அவருக்கேற்றவாறு கதையை மாற்றி காட்சிகள் எழுத எழிலிடம் கோரிக்கை வைத்தார்.

வடிவேலுவுக்காக எழுதப்பட்டிருந்த துள்ளாத மனமும் துள்ளும் கதையில் காமெடி தூக்கலாக இருந்தது. விஜய்க்காக கதையிலும், காட்சிகளிலும் சிறிய மாற்றத்தை செய்து உணர்வுப்பூர்வமான் காட்சிகளை அதிகப்படுத்தினார்.

இதனையடுத்து, விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படம் எடுக்கப்பட்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்தப் படம் காதலர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படம். நேரில் பார்க்கும்போது சிம்ரனுக்கு விஜய் மீது வெறுப்பும், அவரது பாடல்களைக் கேட்டு விஜய் மீது மதிப்பும் உருவாகிறது. ஒரு கட்டத்தில் விஜய்யால் சிம்ரனின் கண் பார்வை பறிபோக, அவரை கவனித்துக்கொள்கிறார்.

சிம்ரனுக்கு கண்பார்வை வரும்போது செய்யாத குற்றத்துக்காக சிறை சென்றிருப்பார். சிறையிலிருந்து வெளியே வரும்போது சிம்ரனிடம் தான் யார் என்று தெரிவிக்க போராடும் அந்த கிளைமேக்ஸ் ரசிகர்கள் மனதை உருக செய்யும்.

இந்த காட்சியை சிறுவர்கள் அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.