
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
பாம்புகளைப் பார்த்தாலே பெரும்பாலானோரின் நிலை மோசமாகிவிடும். ஆனால் பாம்புகளைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலரும் இருக்கிறார்கள்.
இவர்கள் பயப்படாமல் இருப்பது மட்டுமல்ல, பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த பாம்பை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அப்படி பாம்பை அசால்டாக தனது கட்டுக்குள் கொண்டு வந்த ஒரு பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இந்த வீடியோவில், காட்டில் ஒரு பெண் ஒரு நாகப்பாம்பை (Cobra Video) பிடிக்க முயல்வதைக் காண முடிகின்றது. பொறுமையாக முயற்சி செய்து, கவனம் சிதறாமல், இறுதியாக அந்த பாம்பை அழகாக பிடித்து விடுகிறார் அந்த பெண். இந்த வீடியோ வெளியானதில் இருந்தே மக்கள் இந்த வீடியோ பற்றி பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வனப்பகுதியில் ஒரு பெண் தன் குழுவுடன் நாகப்பாம்பு ஒன்றை மீட்க முயற்சிப்பதை காண முடிகின்றது. அந்தப் பெண் முதலில் பாம்பின் வாலைப் பிடிக்கிறார்.
பின்னர் ஒரு மரக்கிளையின் உதவியுடன் அதன் தலையை அழுத்தி அழுத்தி அதை மெதுவாக பைக்குள் செல்ல வைக்கிறார். அந்தப் பெண் பாம்பை பிடிக்கும் போது, அவரது அணியில் உடன் இருப்பவர்களும் சற்று பயந்துதன் போகிறார்கள் என்பதை வீடியோவில் காண முடிகின்றது.
தூர நின்றுகொண்டு பெண்ணின் துணிச்சலை நம்ப முடியாமல் அவர்கள் காண்பது தெரிகிறது. ஆனால், அந்த பெண் மிகவும் தைரியத்துடன் அந்த பாம்பை பிடிக்கிறார்.
பாம்பை பிடிக்கும் அந்த பெண் ஒரு வனத்துறை அதிகாரி என்றும் அவர் பெயர் ரோஷ்ணி என்றும் வெளியிடப்பட்டுள்ள வீடியோவுடன் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுடன், “ரோஷ்னி, ஒரு துணிச்சலான வனப் பணியாளர். அவர் காட்கடாவில் மக்கள் குடியிருப்புகளில் இருந்து ஒரு பாம்பை மீட்டார். பாம்பு பிடிப்பதில் இவர் வல்லவர். நாடு முழுவதும் வனத்துறைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.” என்று எழுதியுள்ளார்.
இந்த வீடியோ (Viral Video) 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 200 முறைக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்துள்ளன.
A brave Forest staff Roshini rescues a snake from the human habitations at Kattakada. She is trained in handling snakes.
— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) February 3, 2022
Women force in Forest depts across the country is growing up in good numbers. VC @jishasurya pic.twitter.com/TlH9oI2KrH