நிச்சயம் முடிந்தது.. நிக்கி போட்ட பதிவு!

Published:

adhi nikki - 2026

யாகவராயினும் நா காக்க’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இருவரும் குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டு அந்தத் தகவலை உறுதிபடுத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆதி மற்றும் நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இருவரும் இதுகுறித்து மௌனம் காத்துவந்தனர்.

இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தனது நிச்சயதாரர்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில், நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எங்களுக்குள் காதலை உணர்ந்தோம். தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்திருக்கிறது. 24.03.2022 – இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.

இரு குடும்பத்தார் முன்னிலையில் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. உங்கள் ஆசிர்வாதங்களுடன் எங்களது பயணத்தை துவங்கவிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் வாழ்த்து தெரிவத்து வருகின்றனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img