Squirrel - 2026

வெயிலின் கொடுமை.. தாகம் தீர்ப்பதும் தார்மீக கடமையே..!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Squirrel - 2026

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல சிறிய உயிரினங்கள் அவதிப்பட்டு வருகின்றன, அவற்றின் தேவைகளை பலரும் அறிவதில்லை

இந்நிலையில் வழிப்போக்கர் ஒருவர் சாலையோரத்தில் தாகத்தில் தவித்திருந்த அணிலுக்கு தண்ணீர் கொடுத்து அதன் தாகத்தை தணித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோல ஏற்கனவே ஒரு நபர் தாகத்தில் இருந்த பச்சை பாம்பு ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீரை ஊற்றி அதனை குடிக்க வைத்த காட்சி பலரையும் கவர்ந்த நிலையில் தற்போது அணிலின் தாகத்தை தீர்த்த வழிப்போக்கரின் மனிதநேய செயல் பலரின் இதயங்களையும் கவர்ந்து இருக்கிறது.

இந்த வீடியோவானது பைடெங்பைடன் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் அணில் ஒன்று சாலையோரத்தில் உள்ள பாறாங்கற்கள் மீது நிற்பதை காண முடிகிறது.

அணிலுக்கு எதிர்புறம் சாலையில் தொப்பி மற்றும் காற்சட்டை அணிந்துகொண்டு ஒரு வழிப்போக்கர் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அதிலுள்ள தண்ணீரை அணிலுக்கு கொடுக்கிறார்.

அந்த அணில் நின்றுகொண்டு வேகவேகமாக அந்த பாட்டிலை தனது இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு பாட்டிலில் உள்ள தண்ணீரை பருகுகிறது. இந்த காட்சி பார்ப்பதற்கு அழகானதாகவும், இதயத்தை கவரும் வகையிலும் அமைந்து இருக்கிறது.

மேலும் இந்த வீடியோவுடன் ‘நன்றி’ என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது. வெறும் 15 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த வீடியோவிற்கு சில இதய எமோஜிகளை பதிவிட்டுள்ளனர், ஒரு பயனர் விலங்குகளிடம் ‘அன்பாக உள்ளவர்களை நான் விரும்புகிறேன்’ என்று கமெண்ட் செய்துள்ளார்,

மற்றொருவர் ‘இது மிகவும் இனிமையாக இருக்கிறது’ என்றும், மற்றொருவர் ‘உதவி மற்றும் இரக்க குணத்தை இது காண்பிக்கிறது’ என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.