ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே திருமணவிழாவுக்கு சென்ற பஸ் சனிக்கிழமை இரவு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்8 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம்சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளி – திருப்பதி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. முதல்கட்ட தகவலில், அதிவேகமாக சென்றதால் வளைவில் திரும்ப முடியாமல் பேருந்து பள்ளத்தில் விழுந்து கவிழந்தது தெரியவந்தது. 63 பேர் பயணித்த அந்த பேருந்தில் ஒரு பெண், ஒரு சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


சம்பவ இடத்தில், மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் ஆறு பேரின் சடலத்தை மீட்டுள்ளனர். நாரவரிப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த எட்டு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உயிரிழந்தவர்கள் மலிஷெட்டி வெங்கப்பா (60), மலிஷெட்டி முரளி (45), கந்தம்மா (40), மலிஷெட்டி கணேஷ் (40), ஜெ.யஷஸ்வினி (8), ஓட்டுநர் நபி ரசூல், ஓட்டுநரின் உதவியாளர் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பேருந்தில் இருந்த மணமக்கள் உள்பட மொத்தம் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பேருந்து அதிவேகமாக சென்ற நிலையில், வளைவில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வலதுபுறம் உள்ள 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழந்துள்ளது. விபத்துக்குள்ளான பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால், இரவு 10.30 மணிவரை விபத்து குறித்து அப்பகுதியில் யாருக்கும் தெரியவில்லை. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மக்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளத்திற்குள் பார்த்துள்ளார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், விரைவாக செயலாற்றி அப்பகுதியில் இருந்த காவலர்களுடன் பைக்கில் வந்த நபரும் முதலில் மீட்புப் பணியில் இறங்கியுள்ளார். விபத்து தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் எம். ஹரிநாராயணன், திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அப்பல்லா நாயுடு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர்.




