December 20, 2025, 2:25 PM
27.8 C
Chennai

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

ind vs sa t20 winner cup - 2025

இந்தியா தென் ஆப்பிரிக்கா டி-20 தொடர் 2025 – தொடரை இந்திய அணி வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

            தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் பயணம் செய்து வருகிறது. மூன்று டெஸ்ட்கள் கொண்ட தொடர், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடர், ஐந்து டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆகியவற்றில் ஆடியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வென்றது. ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி வென்றது. அடுத்து நடந்த டி-20 தொடரிலும் இந்திய அணி வெற்றி பெர்றிருக்கிறது.

            முதல் டி-20 ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் ஆடி 6 விக்கட் இழப்பிற்கு 175 ரன் (ஹார்திக் பாண்ட்யா 59 ரன்) எடுத்தது. இரண்டாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வியுற்றது. இரண்டாவது டி-20 ஆட்டம் சண்டிகர் முல்லன்பூரில் நடந்தது. இங்கு ஐ.பி.எல் ஆட்டங்கள் இதற்கு முன்னர் நடந்துள்ளது. ஆனாலும் இதுவே இங்கு நடக்கும் முதல் பன்னாட்டு போட்டியாகும். இதில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கட் இழப்பிற்கு 213 ரன்கள் (க்விண்டன் டி காக் 90, வருண் 2 விக்கட்) எடுத்தது. பதிலுக்கு இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன் (திலக் வர்மா 62, பார்ட்மேன் 4 விக்கட்டுகள்) எடுத்து அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது. இதனால் தோல்வியுற்றது.

            மூன்றாவது ஆட்டம் தர்மசலாவில் நடந்தது. இங்கே முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்னுக்கு (மர்கரம் 61 ரன்) அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. பின்னால் ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 120 ரன்கள் (அபிஷேக் ஷர்மா 35, கில் 28, திலக் 26*) எடுத்து வெற்றி பெற்றது. நான்காவது டி 20 ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. ஆனால் பனி, புகைப்பனி காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் நான்காவது டி-20 ஆட்ட முடிவில் தொடர் 2-1  என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும்; தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் தொடர் சமனி முடியும் என்ற நிலை இருந்தது.

            ஐந்தாவது டி-20 ஆட்டம் அகமதாபாத்தில் நடந்தது. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் தொடக்கவீரராக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் (22 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) ஆடினார். அவரும் அபிஷேக் சர்மாவும் (21 பந்துகளில் 34 ரன்கள், 6 ஃபோர், 1 சிசர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். அபிஷேக் சர்மா 5.4 ஓவரில் ஆட்டமிழக்க, திலக் வர்மா (42 பந்துகளில் 73 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) ஆடவந்தார். சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 5 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஆடவந்த ஹார்திக் பாண்ட்யா (25 பந்துகளில் 63 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார். அதிலும் அந்த 14ஆவது ஓவர் மறக்க முடியாத ஓவர். முதல் பந்தில் திலக் வர்மா ஒரு சிக்சர் அடித்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்து பாண்ட்யா மட்டையாட வந்தார். மூன்றாவது பந்தில் ஒரு ஃபோர், நாலாவது பந்தில் ஒரு சிக்சர், ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர், ஆறாவது பந்தில் ஒரு ஃபோர் என பாண்ட்யா 20 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 27 ரன்கள் எடுக்கப்பட்டது. பாண்ட்யா 19.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது ஆடவந்த ஷிவம் துபே (3 பந்துகளில் 10 ரன்) சிறப்பாக ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது.

            இரண்டாவதாக ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (35 பந்துகளில் 65 ரன், 9 ஃபோர், 1 சிக்சர்) ரீசா ஹெண்ட்ரிக்ஸ் (12 பந்துகளில் 13 ரன்) இருவரும் நல்ல் தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய டிவால்ட் பிரிவிஸ் (17 பந்துகளில் 31 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) டேவிட் மில்லருடன் (14 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர்) இணைந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஏழாவது ஓவரில் முதல் விக்கட்டை வருண் வீழ்த்தினார். இரண்டாவது விக்கட்டை (டி காக்) பும்ரா 11ஆவது ஓவரில் வீழ்த்தினார். 12ஆவது ஓவரில் மூன்றாவது விக்கட் (டிவால்ட் ப்ருவிஸ்) ஹார்திக் பாண்ட்யாவால் எடுக்கப்பட்டது. 13ஆவது ஓவரில் வருண் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். 15ஆவது ஓவரில் அர்ஷதீப் டேவிட் மில்லரின் விக்கட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் வருண் மற்றொரு விக்கட்டை வீழ்த்தினார். 17ஆவது ஓவரில் பும்ரா மார்கோ யான்சன் விக்கட்டை வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் தெ ஆப்பிரிக்க அணி 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

            இந்தத் தொடரில் பும்ரா 100 விக்கட்டுகள் எடுத்த சாதனையைப் புரிந்தார். அதுபோல ஹார்திக் பாண்ட்யா 100 விக்காட்டுகள் எடுத்தார்; டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

Topics

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

Entertainment News

Popular Categories