


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளது. ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
பொன்னியின் செல்வன் – 1 முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் கண்டுகளிக்கலாம் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. “பொன்னியின் செல்வன் -1” திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 6-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை காண பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.