என்னை களங்கப்படுத்த சதி நடக்கிறது: ஆபாச வீடியோ விவகாரத்தில் லட்சுமி மேனன் ஆவேசம்

சினி நியூஸ்

Lakshmi-Menonசென்னை: லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ்-அப்களிலும் அண்மைக் காலத்தில் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட லட்சுமி மேனன், தன்னைக் களங்கப் படுத்த சதி நடப்பதாக ஆவேசத்துடன் கூறினார். லட்சுமி மேனன் குறித்து வெளியான இந்தப் படங்களால், திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன்தானா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா என்று விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில், இது குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்தார்.. அப்போது, ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நானல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டு இருப்பது தெரிகிறது. கடந்த சில வருடங்களாக சினிமாக்களில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை என்னைப் பற்றி எந்தவொரு தவறான செய்தியும் வந்ததில்லை. ஆனால் இப்போது திட்டமிட்டு இந்த ஆபாசப் படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது பிளஸ்டூ தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கிறேன். என்னைப் படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி நடந்திருக்கலாம் என நினைக்கிறேன். அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தேர்வு முடிந்ததும் இந்த சதிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குவேன். நடிகையாகி விட்டால் இது போன்ற சங்கடங்களை சந்தித்துதானே ஆக வேண்டும். – என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.