முலாயம் இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: ஆதாயம் தேடுவதாக புகார்

இந்தியா

pm-modi-at-saifai சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். முலாயம்சிங் யாதவின் இளைய பேரன் தேஜ் பிரதாப்சிங் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜ லட்சுமிக்கும் வரும் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமண விழாவின் ஒரு பகுதியாக, மணப்பெண்ணுக்கு திலகம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவுக்காக சுமார் 80,000 சதுர அடி அளவில் ஜெர்மனிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. இந்தப் பந்தல், நீராலோ தீயாலோ பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக அமைந்த ஒன்று. இந்த விழாவுக்கு காலை 10.45 மணி அளவில் சிறப்பு விமானத்தில் வருகை தந்த மோடியை, லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும் வரவேற்று அழைத்துச் சென்றனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மோடி அங்கே இருந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மோடியின் முன்னரேயான வருகை, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என அங்கே புகார் கிளம்பியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.