“சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்”

ஆன்மிகம்

“சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்” “பொருத்தம் காட்டும் பெரியவா”

ரா.கணபதி. எழுதியது தட்டச்சு;வரகூரான். புராண விஷயமாகத்தான் என்றில்லை.947129_585338794830241_865216797_n எந்தத் துறையிலும் பொருத்தம் காட்டுவார். சரித்திர ரீதியில் ஒன்று பாருங்கள்.; “சோழனைச் ‘சோள’ என்றே சம்ஸ்கிருதத்தில் சொல்கிறோம்.சம்ஸ்கிருதத்தில் ‘ழ’இல்லாததால் தான் ‘ள’ வாக்கி விட்டார்கள் என்று நினைக்கலாம்.எனக்கோ ‘சோள’ என்பதே ரொம்பப் பொருத்தமாய்த் தோன்றுகிறது. சோளத்தின் விசேஷம் என்ன? தானிய வகைக்குள்ளேயே சோளப் பொரிதான் தனக்கு உறை போட்டுக்கொண்டே பிறக்கிறது. சோளம் என்றாலே உறைதான்.இதனால்தான் சட்டைக்குக் கூட ‘சோளி’ என்று பெயர் இருக்கிறது.சோழ நாட்டின் தலைநகர் எது? உறையூர் தானே?” ஆஹாகாரம் போடத் தோன்றுகிறதல்லவா!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.