உலகின் மிக உயரமான துபை டார்ச் கட்டடத்தில் தீ விபத்து

உலகம்

dubai_fire துபை நகரில், உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான ‘தி மரினா டார்ச்’ என்ற குடியிருப்புக் கட்டடத்தில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 79 அடுக்கு மாடிகளைக் கொண்ட 336.1 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டடத்தில், நள்ளிரவு 2 மணி அளவில் கட்டிடத்தின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அதனால், தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவத் தொடங்கியது, இதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக அவசரமாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 10 தீயணைப்புக் குழுக்கள் ஈடுபட்டதாகவும், தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ அவசர வாகனங்களும் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை கட்டடத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட பகுதி சாலைகளில் அவசரமாக போக்குவரத்து மாற்றங்களைச் செய்ததாகவும் பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தோ, தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்தோ தகவல் வெளியாவில்லை. இந்தத் தீ விபத்துச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.