இயக்குனராக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் சீ.வி.குமார்

Published:

 

புதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.

வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனமும் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால் மற்றும் கலை இயக்கம் கோபி ஆனந்த். அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் படபிடிப்பு தொடங்குகிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img