
பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் சில படங்களை தயாரித்து வருகிறார். அவர் தயாரித்து வரும் படங்களில் ஒன்று ‘பேய்ப்பசி
இந்த படத்தில் யுவன்ஷங்கர்ராஜாவின் உறவினர் ஹரிபாஸ்கர் ஹீரோவாக நடிக்கின்றார். நமிதா மற்றும் அம்ரிதா ஐயர் ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து இசையமைக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலை நடிகர் விஜய்சேதுபதி பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



