
கொம்பன் படத்தை இயக்குனர் முத்தையா தற்போ விஷாலை வைத்து மருது என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக யாரேனும் கூறினால் தயவு செய்து அதை நம்ப வேண்டாம் என்று அவசர அவசரமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நான் பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்தவிதமான சமூக வலைதளங்களை இதுவரை பயன்படுத்தியதில்லை. எனது பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான கணக்குகளை தொடங்கி அதில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.
அதே போன்று எனது பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்வது போன்ற தகவல்கள் என்னிடம் வருகிறது. அதனால் தயவு செய்து என்னை யாரும் நேரில் சந்திக்காமல் எனது பெயரில் வரும் எந்த ஒரு பொய்யான தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம். அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துகொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


