‘தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுப்பது இல்லை’ என்பது சிலரது கொள்கை. அது என்ன கொள்கையோ தெரியவில்லை.
விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நண்பனைப் பற்றி தகவல் வரலாம். ”ஏம்ப்பா, இந்த நம்பரைக் கொஞ்சம் போட்டுத் தர்றியா?” என இரவல் செல்போன் வாங்கி உறவினர் ஒருவர் பேசலாம். புதிய வாய்ப்பு ஒன்றுக்கான அழைப்பாக இருக்கலாம்.
ஆனால், ”நம்பர் தெரிந்தால்தான் நம்புவேன்” என்பவர்கள் கஸ்டமர் கேர் அழைப்புகளை வெளிநாட்டு நம்பர் என நினைத்து, பதறி எடுப்பதைப் பார்த்தால், ஒரே சிப்புச் சிப்பா வருது!
– பாரதி தம்பி (மிஸ்டு கால்:


